“தற்கொலையால் நீட் தேர்வை இரத்து செய்ய முடியாது” இல.கணேசன் கருத்து ..!!

தற்கொலைகளை மட்டுமே காரணம் காட்டி நீட் தேர்வை ரத்து செய்ய சொல்வது ஏற்புடையது அல்ல என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பிற்கான தேசிய நுழைவு தேர்வான நீட் தேர்வை மத்திய அரசு நிறைவேற்றியற்றது. இதற்க்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் உட்பட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தமிழக அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் தமிழக அரசின் தீர்மானத்தை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இது தமிழக அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Image result for இல.கணேசன்

இந்நிலையில் மத்திய அரசின் இந்த செயலுக்கு திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில் , தற்கொலைகளை மட்டுமே காரணம் காட்டி நீட் தேர்வை ரத்து செய்ய சொல்வது ஏற்புடையது அல்ல. நீர் தேர்வை பாஜக ஆதரிக்கிறது, நீட் தேர்வு நடந்தே தீரும், இதனால் ஏழை மாணவர்கள் பயன்பெறுவர் என்று  இல.கணேசன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *