“உங்களுக்கு ஓட்டு போட முடியாது” ஆபாசமாக பேசி அமைச்சரை விரட்டிய மக்கள்…. வைரலாகும் வீடியோ…..!!

“உங்களுக்கு ஓட்டு போட முடியாது”—— சேர்ந்துள்ளீர்கள் என்று ஆபாசமாக பேசி  அமைச்சரை விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தலில் வேட்பாளர் பட்டியல் வெளியாகியதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான அணியும் பிரதான கட்சிகளாக களத்தில் இருக்கின்றன.அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய நீதிக்கட்சி மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது.

admk bjp க்கான பட முடிவு

இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை K.புதூர் பள்ளிவாசலில் ஓட்டு கேட்டு சென்ற போது BJP-யுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள் உங்களுக்கு ஓட்டு போட முடியாது என்று விரட்டியடித்தனர். ஒரு கட்டத்தில் கூட்டணி சேர்ந்தது குறித்து ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி மக்கள் பேச தொடங்கியதால் அமைச்சர் விட்டால் போதும் என்று ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.