வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மேம்பாடுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் தொலை தொடர்பு இல்லாத காலங்களில் தங்களுடைய தகவல்களை பகிர்ந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக தபால்துறை இருந்து வந்தது. அதன் மூலம் ஒரு தகவலை அனுப்பவும் பெறவும் முடிந்தது. தற்போது அடைந்து வரும் அதி நவீன வளர்ச்சி காரணமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு காணொலி காட்சி வாயிலாக பகிர்ந்து கொள்ள முடிகிறது. இந்த சூழ்நிலையில் தங்களுடைய கவனக்குறைவு காரணமாக நாம் பயன்படுத்தும் மின் சாதனங்களை முறையாக நாம் பயன்படுத்துவதில்லை.
மொபைல் போன் சார்ஜ் போடும் போது பலர் நிறைய விஷயங்களை மறந்து விடுவதுண்டு. சிலவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு மொபைல் சார்ஜர் போடுவது நல்லது. மொபைல் என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான பொருள். அது இல்லை என்றால் அனைவருக்கும் கை உடைந்தது போல் இருக்கும். ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் யாரும் இல்லை.
ஸ்மார்ட்போன் சார்ஜ் போடும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:
சிறியவர் முதல் பெரியவர் வரை சார்ஜ் போட வேண்டிய கவலை இல்லாமல் அனைவரது கையிலும் கர்சிப் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக பவர் பேங்க் இருக்கும். தரமான பிராண்ட்களை பயன்படுத்துவது மொபைலில் இருக்கும் பேட்டரிக்கு பாதுகாப்பு. அதேபோல் பவர் பேங்கில் சார்ஜ் போட்டிருக்கும் போது ஹெட்போன் பயன்படுத்த கூடாது. மொபைல் கவரை கழட்டாமல் சார்ஜ் போட வேண்டாம். தூங்கும் முன் கண்டிப்பாக மொபைல் போனை சார்ஜ் போட்டு விட்டு தூங்க வேண்டாம். அதிக நேரம் போன் பிளக் பாயிண்டில் இருந்தால் பேட்டரியின் தரம் போய்விடும்.
15% இருக்கும்போது போனை சார்ஜ் போடுவது நல்லது. போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனபிறகு சார்ஜ் போட வேண்டாம். அதற்காக சிறிது நேரம் சார்ஜ் போட்டுவிட்டு எடுத்துவிடலாம் என்று 20 அல்லது 30 சதவீதம் உடனே எடுக்க வேண்டாம். குறைந்தது 80 சதவீத ஜார்ஜுடன் போனை பயன்படுத்துங்கள். ஏதாவது ஓபன் ஆக வைத்து இருந்தால் அதனையும் ஆப் செய்துவிட்டு சார்ஜர் போடவும். இல்லையென்றால் சார்ஜ் ஆவதற்கு தாமதமாகும், பேட்டரியும் வீணாகும் நீண்டநாளுக்கு வராது. காசு கொடுத்து மொபைல் வாங்குவதை விட அதை பாதுகாத்து வைப்பதே அதைவிட முக்கியம்.