யோகிபாபு ஹீரோவாகும் அடுத்த படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வெளியான புதிய தகவல்…!!!

யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து நடிகர் யோகிபாபு தற்போது மலையாளத்தில் பிரபல இயக்குனர் ரெஜிஷ் மதிலா இயக்கும் பேண்டஸி எனும் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

தி கிரேட் இந்தியன் சினிமா சார்பில் உருவாகும் இப்படத்தை ரெஜிஷ் மிதிலா உடன் இணைந்து லிஜோ ஜேன்ஸ் தயாரிக்கிறார். மேலும் பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தில் ரமேஷ் திலக், ஊர்வசி. கருணாகரன், குலப்புள்ளி ஷீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் யோகி பாபு நடிக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *