50-க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடிய யோகிபாபு…!!!

நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது நடித்து வரும் ‘காவி ஆவி நடுவுல தேவி’ திரைப்படத்தில் 50-க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடியுள்ளார்.

தம்பி ராமையா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘காவி ஆவி நடுவுல தேவி’. மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் வியப்பூட்டும் வகையில் தயாராகியுள்ளது. குழலூதும் கண்ணனாக நடிக்கும் யோகி பாபு ஆவியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நடன அழகிகளுடன் நடனமாடிய, ”இந்திரன் கெட்டதும் பிகராலே சந்திரன் கெட்டதும் பிகராலே” பாடலுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

46 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் இரண்டாம் பாகம்!

மேலும் பேருந்து முதலாளியாக தம்பி ராமையாவும், பிரபல தாதாவாக நான் கடவுள் ராஜேந்திரனும், மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் நகைச்சுவையில் தூள் கிளப்பியுள்ளதாக இப்படத்தின் கதாசிரியர் வி.சி.குகநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 1973-ம் ஆண்டு வெளியான  ‘காசி யாத்திரை’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.