பணிச்சுமை மன உளைச்சலை போக்கும் விதமாக ஆர்பிஎப் வீரர்களுக்கு யோகா பயிற்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது.
சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற யோகா பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். பணியில் இருக்கும் பொழுது ரயில் பயணிகளை கையாளும் முறை உடலை பேணிக்காப்பது மன நிலையை சீராக வைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக யோகா பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஎப் வீரர்களின் மன உளைச்சலை போக்கும் விதமாக நடத்தப்பட்ட இந்த யோகா உடல் ஆரோக்கியத்துடன் உடல் மற்றும் மனநிலையை சீராகவும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுவதாகவும் பயிற்சியின்போது ஆர்பிஎப் வீரர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் மாதம் ஒரு முறை இது போல் கூட்டாக இது போன்ற பயிற்சிகள் நடைபெறும் என்றும் மற்ற நாட்களில் அதிகாரிகளே வீட்டில் வைத்து பயிற்சியை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.