நேற்று அறிக்கை…. இன்று தாக்குதல்…. 18 பேர் பலி… சொன்னதை செய்த தலிபான்..!!

ஆப்கானிஸ்தானில் இன்று தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 18 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28_ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அம்ருல்லா சாலேவின் அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

Image result for Kabul attack Taliban bombing,

இதையடுத்து  நேற்று அங்குள்ள தலிபான் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்   இங்கு நடக்க இருக்கும் தேர்தல் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு நாடகமாகும். பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.இந்த நாடகத்தனமான தேர்தலை நிறுத்த நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்: 18 பேர் பலி; நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

இந்நிலையில் அங்குள்ள ஹெராத் மாகாணத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதில்  7 பேர் படுகாயமடைந்தனர். இதற்க்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் இரண்டாவதாக 9 மணியளவில் அங்குள்ள மேற்கு காபுல் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.