என்னது இவங்க கதாநாயகியா?… சினிமாவில் களமிறங்கும் டிக்டாக் பிரபலம்…!!!

டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமான இலக்கிய தமிழ் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

சமூக வலைதளமான டிக் டாக் உலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து புகழ்பெற்றவர் இலக்கியா. தற்போது இலக்கியா கதாநாயகியாக திரையுலகில் காலடி வைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. “நீ சுடத்தான் வந்தியா “படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் .இப்படம் காடு மற்றும் காடு சார்ந்த பகுதிகளில் உள்ள  ரகசியம் விறுவிறுப்பாக உருவாகாக்கப்பட்டது.இதனை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை கா. துரைராஜ் எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார். மேலும் கா.துரைராஜ் இயக்குநர் பிரவீன்காந்தியிடம் சினிமா கற்றவர்.

இப்படத்தில்  கதாநாயகனாக அருண்குமார் நடித்துள்ளார். மேலும் தங்கதுரை நெல்லை சிவா கொட்டாச்சி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். செல்வா இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார்.இசையமைப்பாளர் துரைராஜன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிக் டாக் இலக்கியா கதாநாயகியாக நடித்த அனுபவம் பற்றி கா. துரைராஜ் கூறியது ஆரம்ப நாட்களில் படத்தில் நடிப்பதற்கு சிரமப்பட்டார் பிறகு காலப்போக்கில் நான் சொல்வதை புரிந்துகொண்டு சரியாக நடித்தார்.டிக் டாக்கில் இருந்த கவர்ச்சியை தவிர்த்து  இப்படத்தில் மிகையாகவும் அளவான கவர்ச்சியுடனும் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *