ஆட்சியமைக்க உரிமை கோரி எடியூரப்பா அவசரஅவசரமாக ஆளுநரை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா அரசியல் களத்தில் அதிரடி திருப்பமாக அவசர அவசரமாக எடியூரப்பா ஆளுநரை சந்தித்துள்ளார். ஆளுநரை சென்று சந்திப்பார் என்று தகவல் கூட 20 நிமிடங்களுக்கு முன்பாக தான் வெளியிடப்பட்டது.எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எடியூரப்பா அவர்கள் ஆளுநரை சந்திக்கிறார். ஆளுநரை சந்தித்து கர்நாடகாவில் எதிர்க்கட்சியாக உள்ள தங்களுக்கு முழு பெரும்பான்மை இருக்கிறது எனவே ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தையும் ஆளுநரிடம் எடியூரப்பா கொடுத்திருக்கிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை இழந்ததையடுத்து அடுத்து 48 மணிநேரமாக ஆட்சி அமைக்க உரிமை கோராமல் பாஜக காலம் தாழ்த்தி வந்தது. இதற்கு முக்கிய காரணம் பாஜக கட்சி தலைமை தற்போது உரிமை கூற வேண்டாம் என்று திட்டவட்டமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். இந்த நிலையில்தான் நேற்று இரவு சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்து முக்கியமான மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்வதாக ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் ,மீதமுள்ள 13 சட்டம் உறுப்பினர்கள் தங்கள் கடிதங்களை கொடுத்தவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்று மேலும் இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார் .ஒருவேளை இன்னும் இரண்டு தினங்கள் கழித்து அவர்களையும் தகுதி நீக்கம் செய்தால் கர்நாடக சட்ட சபையானது ஒரு முழு பெரும்பான்மை இல்லாத ஒரு அவையாக மாறி விடும் அந்த சமயத்தில் எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினால் அது பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும். எனவே இந்த நிலையில்தான் இன்று காலை அவசர அவசரமாக அவர் ஆளுநரை சென்று எடியூரப்பா சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளார் என்று அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.