“எடியூரப்பாவிற்கு என் மீது கருணை ஏற்பட்டுள்ளது” முதல்வர் குமாரசாமி …!!

எடியூரப்பாவிற்கு திடீரென என் மீது கருணை ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பேரவையில் தெரிவித்துள்ளார். 

இன்று காலை கர்நாடக மாநில சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் முதலைமைசர் குமாரசாமி ,  தனது அரசு மீது நம்பிக்கை கோரி பேசும் போது ராஜினாமா செய்த MLA_க்கள்  சுயமரியாதை இல்லாதவர்கள், சபாநாயகரின் அதிகாரத்தை கேள்விகுறியாக்கும் வகையில் செயல்படுகின்றனர். கர்நாடகவில் நடப்பதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறினார்.

Image result for எடியூரப்பா குமாரசாமி

தொடர்ந்து பேசிய குமாரசாமி , கூட்டணி அரசை தொடர்ந்து நடத்துவேனா, இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளிக்க இங்கு நான் வரவில்லை.  ஆட்சையை எப்பாடியாவது கவிழ்த்து விடவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்று அழுத்தடம் கொடுக்க கூடாது என்று தெரிவித்தார்.எடியூரப்பாவிற்கு திடீரென என் மீது கருணை ஏற்பட்டுள்ளது, அதற்கு நான் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் .