யாருக்காகவும் எதற்காகவும் ஏங்காதே __ வாழ்க்கை வாழ்வதற்கே…!!!!

செல்லும் பாதையில்… எல்லாம் எதார்த்த நிகழ்வுகள் அல்ல.. வரிகளின் கோர்வையே, வாக்கியம்!!  வலிகளின் கோர்வையே  வரலாறு.

வாழ்வின் முடிவென்று ஏதுமில்லை… எல்லாம் திருப்புமுனைகளே உன்னை திருப்பும் வினைகளே..!! வரலாற்று கதைகளை அலசு, உன் வாழ்விற்கு திரைக்கதை கிடைக்கும்…  வெறும் எதிரான சூழல் உன்னை என்ன செய்யும் ? தன்னம்பிக்கை உன்னோடு இருக்கையில்.. அழுவது பலவீனம் அல்ல , அதேசமயம் பெரும் கண்ணீர்… காவியம் ஆகாது!! எல்லோரும் வேகமாக ஓடுகிறார்கள் என்பதற்காக, நீயும் ஓடாதே …!! அவர்கள் ஓடிக்கொண்டிருப்பது, சுடுகாட்டிற்கு.. சிலர் நடைபிணங்களும் உனக்கு அறிவுரைகள் சொல்லும், பொருத்துக்கொள்..!! உனக்கு முன் சென்றவர்களை நிச்சயம் சந்திப்பாய், கல்லறையில்!! அதற்குள் அடையவேண்டியதை  அடை , செய்ய வேண்டியதை செய் ..!! நீ நீயாக இரு..!! போர்க்களம் உனக்காக காத்திருக்கையில், நிழலோடு உனக்கு எதற்கு வெட்டி சண்டை !!

புத்தர் எப்படி இறந்தார் தெரியுமா ...

நேர்மறை கருத்துக்களை அறிக்கை செய்ய மறந்தால்… புலம்ப  தயாராய் இரு!! நிகழ்காலத்தை விட உன்னதமானது, நீ நிகழ்த்தும் காலம்!! பணக்காரனும் நீயும் ஒன்று… நேரத்தின் பார்வையில்!! நிறைய மனங்களை திருட்டு, கொள்ளையிடு, எந்த நீதிமன்றங்களும் தண்டிக்காது..!! நீ ஏற்றிருப்பது, மனதிற்குப் பிடித்த பாதை!! இதில் நீ அடைவதெல்லாம் ஆன்மாவிற்கு அடித்தளமாகும்..  நல்ல நினைவுகளை பதிவேற்றம் செய்!!எல்லோரையும் மன்னி, ஆனால் எதையும் மறக்காதே!! அதுவே அமைதிக்கான வழி..!! சொற்பொழிவு வார்த்தைகள் உதிர்வது நாவினால் அல்ல.. கேட்கும் காதினால்!! மற்றவர்களை பாவம் பார்ப்பதே? மிகப்பெரிய பாவம்!! எல்லா உயிர்களையும், உறவுகளையும் நேசி… ஆனால், எதற்கும் அடிமை ஆகாதே !! நாளை நிச்சயம் வெல்வாய் என்பது வெற்று வார்த்தை அல்ல.. மனதிற்கான உன் எல்லை யாதென தெளிவடை ,  ஆதவனே ஆனாலும் , எண்திசைக்கும் வெளிச்சம் தர இயலாது!!  நிச்சயம் ஏதோ ஒன்றை நீ இழப்பாய்… அது எது என்று நீயே முடிவு செய்…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *