“யார்ரா நீ, எங்கேந்து டா புடிச்சாங்க” ….! ஷர்துல் தாகூரை பாராட்டிய அஸ்வின் ….!!!

தென்ஆப்பிரிக்கா  அணிக்கெதிரான முதல் இன்னிங்சில் இந்திய அணியில் ஷர்துல் தாகூர்  61 ரன்கள் விட்டு கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். 

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னில் ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 229 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதில் இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 17.5 ஓவர்கள் வீசி 67 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இதில் எல்கர், பீட்டர்சன், டாசன், பவுமா, வெர்ரின், மார்கோ ஜேன்சன் மற்றும் லுங்கி நிகிடி ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். அப்போது ஷர்துல் தாகூர் கைல் வெர்ரினின் விக்கெட்டை கைப்பற்றிய போது களத்தில் இருந்த மூத்த வீரர் அஸ்வின் தாகூரை பார்த்து,”யார்ரா நீ, எங்கேந்து டா புடிச்சாங்க உன்ன? “,”நீ பால் போட்டாலே விக்கெட் விழும் “என தமிழில் கிண்டலாக பாராட்டினார். இவர் பேசிய வார்த்தைகள் அம்பயர் மைக்கின் மூலம் ஒளிபரப்பில் கேட்டது . இந்த வீடியோவை பலரும் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *