யாரை நம்புவது என தெரிவதில்லை….! தெரியாதவர்களிடம் பேசும்போது…..! இப்படி பேசுங்க நல்லா இருக்கும் …!!

தெரியாதவர்களிடம் முதல் முறையாக பேசும் போது எப்படி பேச வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு.

முதல் முறையாக நமக்கு தெரியாதவர்களிடம் பேசும்போது எப்போதும் ஒரு தயக்கம் இருக்கக்கூடும். அந்த உரையாடலை ஆரம்பிப்பது எப்படி என்ற குழப்பமும் இருக்கும். இந்த நிலை நாம் தினமும் ரயில், கால்டாக்ஸி, பேருந்து, அலுவலகம் போன்ற இடங்களில் நாம் சந்திக்கும் நபர்களிடமே தோன்றும். தற்போது இருக்கும் சூழ்நிலையில் தெரியாத நபர்கள் பேசினாலே திரும்ப பேசத் தயக்கம் காட்டும் நிலைமை தான் இப்பொது இருக்கிறது. காரணம் யாரை நம்புவது என்று தெரியவில்லை. அதற்கு  தினமும் நாம் பார்க்கும், படிக்கும் செய்திகளே காரணமாக உள்ளது.

இந்நிலையில் தயக்கமின்றி முதல் முறையாக ஒருவரிடம் பேசும் போது பாசிடிவான வார்த்தைகளோடு பேச ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் அலுவலகத்தில் மீட்டிங் சார்ந்த  உரையாடலுக்கு சென்றிருந்திர்கள் என்றால் அவர் அங்கு பேசியது சரியான கருத்து, உங்கள் உரையாடல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இப்படிப்பட்ட  சில பாசிடிவான விஷயங்களை கூறலாம். தெரியாத நபர்  உதவிக்காக காத்துக்கொண்டிருந்தால் நிச்சயம் அந்த இடத்தில் நாம் பேச தயக்கம் காட்டுவது தவறான செயல். இந்நிலையில் அவர்களுக்கு நம் மீது நம்பிக்கை கொடுக்கும் வகையில் ஃபார்மலாக பேசி அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஓரு பாக்ஸை தூக்க முடியாமல் கஷ்டப்படும்  நபர்களுக்கு நான் உதவலாமா என்று கேட்டு பாருங்கள். இப்படி கேட்டப்பதால் ஆரம்பத்தில் நன்மதிப்பை அளிக்கும்.  மேலும் இது எவ்வளவு தூரம் உதவியாக இருக்கும் என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த அணுகுமுறை ஒருவருடனான நட்பை பாராட்ட உதவியாக உள்ளது. அதோடு, உங்களைப் பற்றி ஒருவரிடம் பேசும் பொழுது சுய விவரங்களை அவர்களிடம் கூறி  ஆரம்பித்தல் அவசியம். முதலில் உங்கள் பெயர். நீஙகள் இப்படி, என்ன வேலை செய்கிர்கள் என கூறி பேசலாம். இதனால் அவர்களுக்கும் உங்களுடன் பேசும் போது தயக்கம் வராமல் தடுக்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *