சாம்பாருக்கு ஏற்ற சூப்பர் சைடிஷ் சேனைக்கிழங்கு பொரியல் !!!

சூப்பரான  சேனைக்கிழங்கு பொரியல்  செய்யலாம் வாங்க ..
தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு – 1/2  கிலோ

பெரிய வெங்காயம் – 2

வரமிளகாய் –  8

தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி

கடுகு – 1/4 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி

உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் – 2 சிட்டிகை

மஞ்சள் தூள் – 2 சிட்டிகை

எண்ணெய் – தேவையான  அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

சேனைக்கிழங்கு  க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் சேனைக்கிழங்கை  துண்டுகளாக வெட்டி, அதனை சற்று பாதியளவு  வேக வைத்துக் கொள்ள  வேண்டும். பின்னர் ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து ,கறிவேப்பிலை, வரமிளகாய்  மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவேண்டும். அதில் பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி , சேனைக்கிழங்கு  மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து  கிளறி  இறக்கினால்  சுவையான  சேனைக்கிழங்கு பொரியல்  தயார் !!!