“அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல்”…. யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்…. -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

இதனிடையே இந்த தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு கட்சியின் பல நிலைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கும் என்று உறுதி கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

Leave a Reply