சியோமியின் புதிய Mi ஏ3 ஸ்மார்ட்போன் … அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் ..!!

சியோமி நிறுவனம் தனது  புதிய Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது .

சியோமி நிறுவனத்தின் புதிய Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போன் சிசி9இ என்ற பெயரில் சீனாவில் கடந்த மாதமே விற்பனை செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்  6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் அமோல்ட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மற்றும்,

Image result for mi a3

ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 48 எம்.பி. சோனி ஐ.எம்.எக்ஸ் 586 சென்சார், எப்/1.79, 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதில், 32 எம்.பி. செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 3D வளைந்த பின்புறம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

Image result for mi a3

 

மேலும், இதனுடன் 10வாட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4030 ஹட்ச்  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போனில் கைன்ட் ஆஃப் கிரே, நாட் ஜஸ்ட் புளு மற்றும் மோர் தான் வைட் நிறங்களில் கிடைக்கிறது . இதன்  4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலின்  விலை ரூ. 12,999 என்றும் 4 ஜி.பி. ரேம் , 128 ஜி.பி. மாடல்  ரூ. 15,999 என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.