WTC final : நியூசிலாந்து டாஸ் வின் பண்ணிட்டா…அவங்கதான் ஜெயிப்பாங்க…. ஷேன் பாண்ட்…!!!

நியூசிலாந்து அணி டாஸ் வென்றால் முதலில் பவுலிங் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான  ஷேன் பாண்ட்  கூறியுள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை தொடங்குகிறது.  இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் இந்தப் போட்டி இங்கிலாந்தில்  சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றியை கைப்பற்றும் என்று கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெறும் அணிதான்  2 ஆண்டுகளுக்கு  சிறந்த டெஸ்ட் அணியாக கருதப்படும். இந்த போட்டியில் இடம்பெற்றுள்ள  15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை இரு அணிகளும் அறிவித்துள்ளது. இதுகுறித்த நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான  ஷேன் பாண்ட்  கூறும்போது ,”இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய அணி பேலன்ஸ் பவுலிங் அட்டாக்கை  பெரும் என்று நினைக்கிறேன். இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள் , 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவார்கள் என நினைக்கிறேன். அதேபோல் நியூசிலாந்து அணியில் 5 வேகப்பந்து வீச்சாளர்கள் களம் இறங்க வாய்ப்புண்டு.  இதனால் நியூசிலாந்து அணி டாஸ் வென்றால்  பவுலிங்கைதான் தேர்வு செய்வார்கள்.  நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தால் , இந்திய அணியை  குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழக்க செய்யாவிடில்,  இந்திய அணியில் இருக்கும் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்துக்கு கடினமாக மாறிவிடும். ஆகவே டாஸ் வென்றது என்ன செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது”,என்று அவர் கூறினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *