இறுதிப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் முக்கியமானதாக இருக்கும் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்..

மிகவும் எதிர்பார்க்கப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி (WTC Final) நாளை தொடங்க உள்ளது. ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் WTC இறுதிப் போட்டியில் டீம் இந்தியா   மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் ஏற்கனவே திட்டமிட்டு உள்ளன. இதனிடையே போட்டிக்கு முன் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இரு அணி குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல இரு அணிகளில் உள்ள வீரர்களும், எதிரணி குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் முக்கியமானதாக இருக்கும் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இங்கிலாந்தின் நிலைமைகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சவாலானவை. எனவே, நல்ல ப்ரிபெரேஷன் அவசியம். பெரிய இன்னிங்ஸை விளையாட பேட்ஸ்மேன்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய கவனக்குறைவு கூட ஒரு விக்கெட்டை இழக்க நேரிடும். ஓவல் ஒரு நல்ல பேட்டிங் விக்கெட், ஆனால் வானிலை மோசமாக இருந்தால், பேட்டிங் கடினமாக இருக்கும் என்று ரோஹித் கூறினார்.