WOW!‌… இது வேற லெவல்….‌”இனி நமக்கு நாமே மெசேஜ் செய்து கொள்ளலாம்”…. WhatsApp-ல் புதிய அம்சம் அறிமுகம்….!!!!!!

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த வாட்ஸ் அப் செயலியில் மெட்டா நிறுவனமானது அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் தற்போது நமக்கு நாமே மெசேஜ் செய்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ் அப்பில் மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் அனைத்து விதமான பயனாளர்களுக்கும் தனக்குத்தானே மெசேஜ் செய்து கொள்ளும் புதிய அம்சம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.