அடடே! சூப்பர்….. இளைஞர்களுக்காக 1 கோடி டிஜிட்டல் வேலை…. மத்திய மந்திரி கூறிய சூப்பர் தகவல்…..!!!!

டெல்லியில் கடந்த 1-ம் தேதி முதல் இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. அதோடு மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் உச்சி மாநாடு நடைபெற்றது. இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் சிக்கிம், மிசோரம், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, குஜராத், மத்திய பிரதேசம், பீகார், அசாம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி போன்ற  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள், செயலாளர்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் வளர்ச்சி இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தகவல் தொடர்பு இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார். அவர் பேசியதாவது, மத்திய மற்றும் மாநில அரசுகள் இளைஞர்கள் மற்றும் 1.3 மில்லியன் மக்களின் லட்சியங்களை மத்திய டிஜிட்டல் குழு பூர்த்தி செய்ய வேண்டும். வருகிற 2026-ம் ஆண்டுக்குள் ட்ரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை அடைய வேண்டும். ஒரு கோடி டிஜிட்டல் சார்ந்த வேலைகளை ஏற்படுத்தி தருவதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார். அதன்பிறகு டிஜிட்டல் சேவைகளை பெறுவதற்கான அனுமதி காலம் 3 மாதங்களில் இருந்து தற்போது 6 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அமைச்சர் தேவுசிங் சவுகான் கூறியுள்ளார். இதனையடுத்து தற்போது டிஜிட்டல் துறையில் முன் இல்லாத அளவுக்கு நன்றாக வளர்ச்சி இருப்பதாகவும், மின்னணு துறையில் கூட்டாளியாக இந்தியாவை உலக நாடுகள் நம்புவதாகவும் அமைச்சர் ராஜு சந்திரசேகர் கூறியுள்ளார். மேலும் நிறுவனங்களை ஈர்க்கவும், கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளை உருவாக்குவதற்கு ஏதுவாக ஊக்குவிப்பு திட்டங்களை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.