அடடே!…. ஒவ்வொரு மாதமும் ஒன்னு…. சூப்பர் புகைப்படத்தை பகிர்ந்த மகாலட்சுமி….!!!!

சின்னத்திரை சீரியல்களின் மூலம் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவர் வில்லி கதாபாத்திரங்களில் அசத்தலாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முன்னணி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளரான ரவீந்தரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏற்கனவே விவாகரத்தான நிலையில் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். திருமணத்திற்குப் பிறகு அவ்வப்போது இருவரும் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மகாலட்சுமி தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் புதிதாக தான் வாங்கிய காலண்டரை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். அந்தக் காலண்டரில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு புகைப்படம் என காலண்டரில் இருவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காலண்டர் மிக அழகாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.