Wow…. இப்படியும் வாழ்த்து சொல்லலாமா…. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்…. இணையத்தில் வைரல்…!!

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் சக தோழியின் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதேபோல் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் மூலம் பிரபலமானவர் கல்யாணி பிரியதர்ஷன். கீர்த்தி சுரேஷும், கல்யாணி பிரியதர்ஷனும்  சிறுவயதிலிருந்தே மிக நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கல்யாணி பிரியதர்ஷன் நேற்று அவர் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் கல்யாணி பிரியதர்ஷனின் நெருங்கிய தோழியான கீர்த்தி சுரேஷ் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவர்கள் இருவரும் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை... வைரலாகும் புகைப்படம்