தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சினேகா. இவர் நடிகர் அஜித், கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து  வருகிறார். நடிகை சினேகா பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதோடு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சினேகா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது பச்சை நிற சுடிதாரில் க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை நடிகை சினேகா தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.