திருப்பூரில் பொங்கல் பண்டிகையையொட்டி முதன் முறையாக புறா பந்தயம் நடத்தப்பட்டது. இவற்றில் 8 புறா கூண்டுகள் என்ற விகிதத்தில் 16 ஜோடி புறாக்கள் பந்தயத்தில் பங்கேற்றது. திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் தமிழ்நாடு தியேட்டர் ஆகிய இடங்களில் புறா பந்தயம் நடத்தப்பட்டது. இந்த பந்தயத்தில் பங்கேற்ற புறாக்கள் தங்களது இருப்பிட பகுதிக்கு சென்று கீழே இறங்காமல் தொடர்ந்து பறந்துகொண்டிருக்க வேண்டும்.

அவ்வாறு எந்த புறாக்கள் கீழே இறங்காமல் அதிக நேரம் வானில் பறக்கிறது எனும் நேரத்தை கணக்கிட்டு பரிசுகள் அறிவிக்கப்படும். 2 நாட்கள் நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றி பெறும் புறாக்களுக்கு சான்றிதழ்களும், புறா உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.