டெக்னாலஜி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. வீட்டு வேலை செய்வதற்கு கூட கருவிகள் வந்துவிட்டது. இந்த நிலையில் ஜப்பானில் குளிப்பதற்கு கூட ஒரு எந்திரத்தை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அது வரும் காலத்திற்கான மனித சலவை எந்திரம். அதனை ஜப்பானின் ஓசோவாவில் இருக்கும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் கூறும்போது, போர் விமானத்தின் காக்பிட் அறை போல பிளாஸ்டிக் கருவி ஒன்று இருக்கிறது. பாதி அளவு தண்ணீர் அந்த இயந்திரத்தில் நிரப்பப்பட்டிருக்கும்.

மிதமான சூட்டில் அந்த தண்ணீர் இருக்கும் தண்ணீரை அந்த எந்திரம் உடல் மீது பீய்ச்சி அடிக்கும் போது அழுக்குகள் நீக்கப்படுமாம். உடல் மட்டும் இல்லாமல் மூளையையும் எந்திரம் சுத்தப்படுத்துமாம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நமது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை கண்டுபிடித்து ரிலாக்ஸ் ஆக வீடியோக்களை ஓட விடுமாம். 15 நிமிடத்தில் எந்த சிரமமும் இல்லாமல் இந்த எந்திரத்தின் மூலம் குளித்து விடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.