உலகளவில் கொரோனா உயிரிழப்பு 8,000த்தை தாண்டியது …..!!

கொரோனவால் உலகளவில் 8,000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

தினந்தோறும் புதிது புதிதாக பல நாடுகளுக்கு பரவிய இதன் தாக்கம் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவடைந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 8,00த்தை தாண்டியது. உலக அளவில் 1,99,475 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 82,812 பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.