சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,148ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,23,065ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 176 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து 85,791 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் அமெரிக்காவில் இதற்கான தடுப்பு மருந்து முதல் முறையாக மனிதர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நாளுக்கு நாள் கோரோனோ வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது, சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.