உலக அளவில் கொரோனாவின் நிலை.. வெளியான தகவல்..!!

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் வருடத்தில் சீனாவில் உள்ள வூஹான் என்ற நகரத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அதன் பின்பு படிப்படியாக உலக நாடுகள் முழுவதிலும் பரவியது. கொரோனா பாதிப்பு பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்தியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இருக்கிறது.

எனவே உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பல நாடுகளில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் உலக நாடுகள் முழுவதிலும் மொத்தமாக சுமார் 18.29 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது வரை சுமார் 16.75 கோடி மக்கள் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *