சொந்த மக்களை காவு வாங்கும் உள்நாட்டுப் படைகள்…. 6 குழந்தைகள் பலி….!!

சிரியா உள்நாட்டு படைகள் நடத்திய தாக்குதலில் ஆறு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் ரஷ்ய அடைக்கலத்தை பெற்ற உள்நாட்டு படைகள் சொந்த மக்களின் மீது பீரங்கி தாக்குதலை நடத்தியது .மேலும் சிரியாவில் பல இடங்களில் இந்தத் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே Jabal al-Zawiya  பகுதியில் நடத்திய தாக்குதலில் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து idlib என்ற கிராமத்தில் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரு குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் 2011 போர் தொடங்கியதிலிருந்து இதுவரை ஐந்து லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.