சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த விஜய் மண்டல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு விஜய் மண்டல் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் தொழிற்சாலையில் அமைந்துள்ள 10 அடி உயரம் கொண்ட சுவர் விஜய் மண்டல் மீது இடிந்து விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜய் மண்டலின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட சுற்று சுவர் மழையில் நனைந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.