“நம்ம வீட்டுக்கு வா” செல்போனில் அழைத்த கணவன்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரியான நாகராஜ். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் இருக்கும் பள்ளக்கனியூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மலர்விழி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மலர்விழி ஏலகிரி மலையில் இருக்கும் படகுத்துறை பூங்காவில் கூலி வேலை செய்து வந்திருக்கிறார்.

அதன்பின் நாகராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததினால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது அவர்கள் இருவருக்கும் தகராறு முற்றியதில் மலர்விழி தனது 2 குழந்தைகளுடன் அவரின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மனைவியிடம் செல்போனின் மூலமாக வீட்டிற்கு வருமாறு அழைத்த போது மலர்விழி மறுத்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்து மன உளைச்சலில் இருந்த நாகராஜ் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *