ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் பகுதியில் கூலித் தொழிலாளியான அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த எல்லப்பன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டிற்கு சென்ற எல்லப்பன் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் அண்ணாதுரையின் மகன் பிரபு தாக்கியதால் தான் எல்லப்பன் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் சமுதாய பஞ்சாயத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆகவே எல்லப்பன் குடும்பத்திற்கு அண்ணாதுரை நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அண்ணாதுரை அதனை கொடுக்கவில்லை. இதனையடுத்து மீண்டும் சமுதாய பஞ்சாயத்து கூடி அண்ணாதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளது.
இதுகுறித்து அண்ணாதுரை சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதோடு மன வருத்தத்திலிருந்த அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகன் மாணிக்கம் எல்லப்பனை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அண்ணாதுரை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணிக்கம் சித்தாமூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அண்ணாதுரையின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.