“மன உளைச்சலில் இருந்த ஊழியர்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கரூரில் நடந்த சோகம்….!!!

தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள பசுபதிபாளையம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த வாங்கல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணனின் உடலை மீட்டு காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.