என்ன காரணமாயிருக்கும்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. வேலூரில் பரபரப்பு….!!!

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தில் அலிபாபா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைத்தறி தொழிலுக்கு தேவையான கட்டும் பணி செய்து வந்துள்ளார். இவர் சிறுவயதில் கும்பூ பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். இவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து அலிபாபா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் தூக்குப் போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள குடியாத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அலிபாபாவின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *