42 லட்சம் பண மோசடி…. புகார் மனு கொடுத்த அதிகாரி…. தீவிர விசாரணை நடத்தும் போலீஸ்….!!!

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ 40 லட்சம் பணத்தை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்பு அதிகாரி வசித்து வருகின்றார். தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார். இவர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் எனது மருமகளுக்கு செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி அலுவலராக வேலை வாங்கி தருவதாக சென்னையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறி ரூ 40 லட்சம் பணம் கேட்டார்.

அதன்படி பணத்தை ஆசிரியரிடம் கொடுத்தும் அவர் வேலை தாங்கி வரவில்லை. இதனையடுத்து பணத்தை திருப்பி கேட்ட போது அவர் அங்கும் இங்கும் எங்களை அலைகளித்தார். அவரிடமிருந்து எங்களது பணத்தை மீட்டுத் தந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *