ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. பரிதாபமாக உயிரிழந்த பெண்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் நித்யா பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி நித்யா ஓட்டி சென்ற ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நித்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நித்தியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.