” அதிமுக_விற்கு பெண்கள் வாக்களிக்க மாட்டார்கள் ” கொ.ம.தே.கட்சியின் பொதுச்செயலாளர் பேட்டி…!!

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழக பெண்கள் யாருமே வாக்களிக்க மாட்டார்கள் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சி_க்கு ஒதுக்கப்பட்டுள்ள நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சின்ராஜ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்  செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

Image result for கொ.ம.தே.கட்சியின் பொதுச்செயலாளர்

அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தைப் பொருத்தவரை பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அந்த மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை அரசு காப்பாற்ற முயற்சிப்பதை  தமிழக பெண்கள் அனைவரும் பார்க்கிறார்கள் . இதனால் அதிமுக கூட்டணியில் இருக்கக்கூடிய வேட்பாளர் யாருக்குமே தமிழகப் பெண்கள் வாக்களிக்க மாட்டார்கள் .  இந்த அரசாங்கத்திற்கு தமிழகத்தில் உள்ள பெண்கள் யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய காட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டியளித்தார்.