நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் கோஷிம்படா பகுதியில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இந்நிலையில் அங்குள்ள பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் குடங்களை சுமந்து தொலை தூரங்களில் உள்ள கிணற்றுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். இருப்பினும் வற்றிய நிலையில் உள்ள அந்த கிணற்றிலிருந்து சேறு கலந்த தண்ணீரை எடுக்க முடிவதாகவும், அதனை குடிக்க முடியாத நிலை இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஆழமான அந்த கிணற்றின் கயிறு கட்டி இறக்கி பெண்கள் தண்ணிர் எடுக்கும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.