கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முன்சிறை அள்ளம் பகுதியில் திரிசோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சாந்தி தனது ஸ்கூட்டரில் புதுக்கடை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். இவர் நாட்டுபள்ளி பகுதியில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த கார் ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.