ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், பள்ளிக்குச் செல்ல தடை, வேலைக்கு செல்ல தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணையுடன் செல்ல வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மருத்துவ படிப்புகளை பெண்கள் படிக்க தலிபான்கள் தடை செய்துள்ளனர். இதற்கு அந்த நாட்டின் கிரிக்கெட் வீரரான ரஷித் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், கற்றலின்  முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது.

பெண்களுக்கான கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மூடப்பட்டது மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. இது பெண்களின் எதிர்காலத்தை பாதிக்கும் அது மட்டுமல்ல, நமது சமூகத்தின் கட்டமைப்பையும் பாதிக்கிறது. ஆதலால் இந்த முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்களது கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி வழங்குவது சமூகப் பொறுப்பு மட்டுமல்ல, அது நமது தார்மீக கடமை என்று அவர் கூறியிருந்தார்.