“தன் வினை தன்னை சுடும்” போஸ்க்கோ சட்டத்தை தவறாக பயன்படுத்திய பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்..!!

தமிழகத்தில் முதன்முறையாக பெண் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தனது மகளை கணவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக  பொய் புகார் அளித்தது வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் அளித்த தீர்ப்பில், சம்மந்தப்பட்ட பெண் போஸ்கோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், இது  முற்றிலும் தவறான உதாரணம் என்றும் கூறிய  அவர் ,

Image result for high court chennai

மகளின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் கணவருக்கு எதிராக மனைவி கேவலமான புகாரை கொடுத்திருப்பது மனசாட்சியை உலுக்குவதாக வேதனை தெரிவித்துள்ளார். இந்த அளவிற்கு ஒரு தாய் செல்வாரா என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று கூறிய அவர்,  கணவன் மீதான போஸ்கோ வழக்கு ஒரு நொடி கூட தொடரக் கூடாது என்று குறிப்பிட்ட சில நிமிடத்திலையே பொய் புகார் அளித்த மனைவி மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.