“அடக்கடவுளே!”…. 100-க்கும் மேற்பட்ட ஆபாச மெசேஜ்…. 15 வயது சிறுவனை…. பெண் செய்த கொடூரம்…. பிரிட்டனில் அதிர்ச்சி….!!

லண்டனில் 15 வயதுடைய சிறுவனை காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் இருக்கும் East Sussex பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய Carol Taylor என்ற பெண் இன்ஸ்டாகிராம் மூலமாக 15 வயதுடைய ஒரு சிறுவனுடன் பழகி இருக்கிறார். தினமும் சிறுவனுடன் பேசியிருக்கிறார். அதன்பிறகு நேரில் சந்திக்க வருமாறு கூறியிருக்கிறார். எனவே,  சிறுவனும் அவரைப் பார்க்க வந்திருக்கிறார்.

அப்போது, Carol Taylor  சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார். மேலும் இதனை வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்றும் மிரட்டியிருக்கிறார். அடிக்கடி சிறுவனை வரவழைத்து தொந்தரவு செய்திருக்கிறார். எனவே, சிறுவன் தன் பெற்றோரிடம் கூறிவிட்டார்.

இதனைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி, Carol Taylor மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் அச்சிறுவனுக்கு Carol Taylor 100க்கும் அதிகமான ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *