மைக் டைசனிடம் ரூ.40.81 கோடி கேட்டு பெண் வழக்கு…!!!

பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசனுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ள பெண் 40.81 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக கோரியுள்ளார். கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை உலக ஹெவி வெயிட் சாம்பியனாக வலம் வந்தவர் மைக் டைசன்.

இவருக்கும் இவரது மனைவியான நடிகை ராபினுக்கும் விவாகரத்து ஆன நிலையில் 32 ஆண்டுகளுக்கு முன்பு மைக் டைசன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். வேறு எதுவும் குறிப்பிடப்படாமல் அந்தப் பெண் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் 1990 ஆம் ஆண்டு மட்டும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு 40.81 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply