சிகிச்சைக்கு வந்த பெண்…. தனி அறைக்கு அழைத்த ஊழியர்கள்…. பின் நேர்ந்த துயரம்..!!

உத்திரபிரதேசத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர்கள் கைது செய்ப்பட்டனர். 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸில்  உள்ள அரசு டிபி மருத்துவமனைக்கு கடந்த 23ஆம் தேதி இரவு 17 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணை வார்டு பாய் சிவானந்தன் உங்களுக்கு ஊசி போட வேண்டும் என்று கூறி கீழே உள்ள அறைக்கு வாருங்கள் என்று தனியாக அழைத்து சென்றுள்ளார்.

Image result for Rapeஅப்பெண் தனது அம்மாவையும் அழைத்து வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு அவர் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஒரு மயக்க மாத்திரையை கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார்.   பின்னர் மயக்கமடைந்த பெண்ணை சிவானந்தம் மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் விஷால் ஆகிய  இருவரும் சேர்ந்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.

Image result for arrested

அதன் பின் மயக்கம் தெளிந்த பிறகு நடந்தவற்றை எல்லாம் தனது தாயிடம் அப்பெண் கூறியுள்ளார். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அரசு மருத்துவமனையிலேயே இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.