தடையை மீறி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி பெண் பலி…!!!

பழவேற்காட்டில் தடையை மீறி சென்ற படகு மற்றொரு படகுடன் மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் எட்டு ஆண்டுகளுக்கு முன் பல விபத்துகள் ஏற்பட்ட காரணத்தால்  படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 16 பேருடன் முகத்துவாரம் பகுதிக்கு சென்றுவிட்டு கரை திரும்பிய சுற்றுலா பயணிகளின்  படகு எதிர்பாராமல் எதிரே வந்த மற்றொரு படகு மீது மோதியதில் அனைவரும் கடலுக்குள்ளெ விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து படகோட்டி  அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பயணிகளை கண்ட  மீனவர்கள் விரைந்து  சென்று அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில்  காசிமேட்டைச் சேர்ந்த மேரி என்ற பெண் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.இவ்விபத்து குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய படகோட்டியை   தேடி வருகின்றனர்.