ஈரோட்டில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டியைச் சேர்ந்த காளிமுத்துக்கு சுதா (வயது34) என்ற மனைவியும், 1 மகளும் 2 மகன்களும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் காளிமுத்து பிட்டராக வேலை பார்த்தும், மேட்டுகடை பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் சுதா வேலை பார்த்தும் இருவரும் குடும்பத்தை நடத்தியும் வந்தனர். இந்நிலையில் சுதா செல்போன் கடைக்கு கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை.

சம்பவம் நடந்த அன்று குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும், காளிமுத்து வேலைக்கும் சென்று விட்டனர். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த காளிமுத்து சுதா வீட்டில் இல்லை என்று தெரிந்தது. மேலும் அக்கம் பக்கம் உறவினர்களின் வீடுகளில் விசாரித்ததில் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இரவு 10.15 மணியளவில் சுதா கதிரம்பட்டியில் ஒரு காலி இடத்தில் கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுதாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சேலம் அரசுமருத்துவமனைக்க மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் சுதா கழுத்தறுக்கப்பட்டது தெரிந்தது.

இதில் சுதா வேலைப்பார்த்து வந்த கடை உரிமையாளர் கோகுலுக்கும் இவருக்கும் கள்ளக்காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுதா அடிக்கடி யாரிடமோ செல்போனில் பேசி வந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த கோகுல் சுதாவை வேலையில் இருந்து நீக்கியுள்ளார். சுதாவை மறக்க முடியாத கோகுல் சுதாவை போனில் தொடர்பு கொண்டு உன்னை பார்க்க வேண்டும் என்று கூறி கதிரம்பட்டியில் உள்ள காலி இடத்திற்கு வர சொன்னதால் சுதா நம்பி சென்றுள்ளார் .

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கோகுல் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுதாவின் கழுத்தை அறுத்து விட்டு தப்பிச்சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் கோகுலை தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.