
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் எளிய தீர்வுகள் என்ற பெயரில் ஏராளமான வீடியோக்கள் வருகிறது. அவற்றின் சில பயனளிப்பதில்லை என்பதை அனுபவத்தில் தான் உணர முடிகிறது. அப்படி ஒரு பெண் எளிமையான முறையில் முடியை நேராக முயற்சி செய்தார். அது ஆபத்தில் முடிந்தது. அதாவது அவர் வீட்டின் சமயல் அறையில் பயன்படுத்தும் இரும்பு இடுக்கியை கொண்டு முடியை நேராக்கலாம் என்று சோதனையை செய்தார்.
அப்போது இரும்பு இடுக்கியை அடுப்பில் சூடாக்கி விட்டு, அதன் பின் தனது முடியில் வைத்து முடியை நேராக்கும் எலக்ட்ரிக் கருவி போல பயன்படுத்த தொடங்கினார். ஆனால் அந்த முயற்சி வீணாகிவிட்டது. ஏனென்றால் சூடான இடுக்கியை முடியை நேராக்குவதற்கு பதிலாக கத்தையாக முடியை துண்டாக்கி விட்டது. இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் மீண்டும் இடுக்கியை நெருப்பில் காட்ட அந்த முடி பற்றி எரியத் தொடங்கியது. பதறிப்போன அவர் அந்த இடுக்கியை தூக்கி எறிந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram