மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுள்ளது என்று மத்திய அமைசர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தார். இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் கொரோனா உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டம் குறித்து மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் 17 % இருந்த மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 % உயர்த்தி 21 % வாழங்கப்படும். இதனால் 48 லட்சம் ஊழியர்கள் பயணப்பெறுவர்கள் என்று தெரிவித்தார்.