கட்டுப்பாடுகளுடன்…. நீச்சல் குளங்களில் அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு…!!

நீச்சல் குளங்களில் பயிற்சி பெற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், பார்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து தற்போது கொரோனா சற்று குறையத் தொடங்கிய நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நீச்சல் குளங்களில் பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களை அனுமதிக்கவும், பயிற்சி பெறவும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நீச்சல் குளங்களின் அளவுகளுக்கு ஏற்ப 10 முதல் 20 வீரர்கள் வரை அனுமதிக்க வேண்டும். நீச்சல் குளங்களில் எச்சில் துப்பக்கூடாது. உடல் நலம் சரியில்லாமல் இருந்தால் பயிற்சியில் ஈடுபட கூடாது. ஒருவரின் உபகரணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளது.