ஐஸ்வர்யா இரண்டாவது முறையாக கர்ப்பம்? அபிஷேக் ட்விட்டால் பரபரப்பு..!!

ரசிகர்களுக்கு விரைவில் ஒரு ஆச்சர்ய செய்தி காத்திருக்கிறது என்று அபிஷேக் பச்சனின் ட்விட்டால், நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கர்ப்பமாகியிருப்பாதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது. ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன், ‘விரைவில் உங்களுக்கு ஒரு ஆச்சர்யமாக செய்தி காத்திருக்கிறது’ என்று ட்விட் செய்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் என்னாவாக இருக்கும் என தீவிரமாக ஆராயத் தொடங்கினர்.

Related image

இறுதியில் ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பாக இருக்கலாம் என்ற தகவல்களை பரப்ப தொடங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் குறித்து பாலிவுட்டில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர தூம் 5 குறித்து அறிவிப்பை வெளியடலாம், பாலிவுட் சினிமாவிலிருந்து ஓய்வை அறிவிக்கலாம் போன்ற பல வேடிக்கையான பதிவுகளையும் அபிஷேக் ட்விட்டரில் இடம்பிடித்துள்ளது.

Related image

சிலர் தந்தை அமிதாப்பின் உடல்நலம் குறித்து விசாரித்ததுடன், அவரது கேபிசி டிவி நிகழ்ச்சியின் அடுத்த சீசனை நீங்கள் நடத்தப்போகிறீர்களா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர். இதனிடையே, கொல்கத்தாவில் பாப் பிஸ்வாஸ் படத்தின் பணியில் பிஸியாக இருக்கிறார் அபிஷேக் பச்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *